Original upload date: Thu, 11 Apr 2013 02:00:00 GMT
Archive date: Sat, 11 Dec 2021 15:54:48 GMT
நையாண்டி மேளம்
மேளம் இரு வகைப்படும் ஒன்று கோவில் மேளம். மற்றொன்று நையாண்டி மேளம். "கோவில் மேளம்" திருக்கோவில் வழிபாடு, சுவாமி புறப்பாடு, சுவாமி திருஉலா, தேர்த்திருவிழாவில் வாசிக்கப்படுவது. மங்கல இசை
...
வாசிக்கவும், "கோயில் மேளம்" பயன்படுகிறது. நையாண்டி மேளம், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை முதலிய நாட்டப்புற ஆட்டங்களுக்கு பின்னணி வாத்தியமாக இடம் பெறுகின்றது. திறந்த வெளி அரங்கில் நையாண்டி மேளக் குழுவினர் வட்டமாக நின்று கொண்டு வாத்தியக் கருவிகளை வாசிக்கின்றார்கள்.
நையாண்டி மேளத்தின் அமைப்பு:-
நையாண்டி மேளம் என்பது இரண்டு நாதசுரம், இரண்டு தவில், இரண்டு பம்பை, ஒரு கிடிமுட்டி அல்லது சிணுக்குச்சட்டி, ஒரு சுதிப்பெட்டி ஒரு தாளம் கொண்டதாகும். கொங்கு நாட்டுப் பகுதிகளில் இவ்வாறு தான் நையாண்டி மேளம் அமைந்துள்ளது. தெற்கு நாட்டுப் பகுதிகளில் இவற்றுடன் உறுமியையும் சேர்த்துக் கொள்கின்றார்கள். நையாண்டி மேளத்தில் சில போது மூன்று தவில், நான்கு தவில் என்று சேர்த்துக் கொள்வதும் உண்டு. ஆயின் இரண்டு நாத சுரம் மட்டுமே இடம் பெறும்.
நையாண்டி மேளத்தின் தொடக்கத்தில் நாதசுரக் கலைஞர்கள் பிள்ளையார் துதி வாசிக்கின்றனர். பின்னர் தனது குருநாதரை நினைத்து வாசிக்கின்றனர். கரகாட்டத்திற்கு ஏற்ற வகையில் நையாண்டி மேளத்தை வாசிக்கின்றனர். ஆட்டமும், வாசிப்பும் ஒத்துப் போகுமாறு பார்த்துக் கொள்கின்றனர். கரகாட்டப் பாடலை இவர்கள் நாதசுரத்தில் வாசிக்கின்றனர். பின்னர் தெம்மாங்கு வாசிக்கின்றனர். காவடியாட்டம் ஆடும்போது "காவடிச் சிந்து, வாசிக்கின்றனர். நையாண்டி மேளத்தின் முடிவில் திருப்புகழ் வாசிக்கின்றனர்.
நாட்டுப்புற மக்களுக்கு உற்சாகத்தை ஊட்டக்கூடிய வகையில் நையாண்டி மேள இசை அமைகின்றது. சில இசைக் கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை யாழ் நூல் "ஆமந்திரிகை என்று கூறுகின்றது". பழந்தமிழர் இதனைப் "பல்லியம்" என்று குறிப்பிட்டனர். இசைக்கருவிகளைச் சேர்த்து வாசிப்பதை இன்று வாத்திய விருந்து என்று அழைக்கின்றனர்.
www.eegarai.net
ஈகரை தமிழ் களஞ்சியம்